Friday, 31 October 2008

அசோலா தயாரிப்பு முறை

அசோலா என்பது மிதக்கும் பச்சிலைகள் கொண்ட ஒரு வகைச் செடி அல்லது பெரணியாகும்.இது கடற் பாசியைப் போன்றதேயாகும்.இதில் புரோட்டீன்,அமினோ அமிலம்,விட்டமின்கள் மற்றும் மினரல் போன்ற அணைத்து வகையான சத்துகளும் உள்ளது.

இனப்பெருக்க முறை

பொதுவாக அசோலாவானது நெல் வயல்களில் அல்லது மிதமான தண்ணீர் உள்ள நிலைகளில் வளர்கிறது.சில இடங்களில் கான்க்ரீட் தொட்டிகளில் வளர்க்கின்றனர்

  1. அசோலா தயாரிப்பதற்கு முன்பு முதலில் களைகளை முழுமையாக அகற்ற வேண்டும்
  2. நிலத்தை சமப்படுத்த வேண்டும்
  3. 10cm நீளமுள்ள செங்கற்கல்லை நேராக ஒன்றன் மேல் ஒன்றாக செங்குத்தாக செவ்வக வடிவில் கட்ட வேண்டும்
  4. UV விளக்கில் வைத்து பாக்டீரியா முழுமையும் நீக்கி சுத்தம் செய்த சல்பானலைன் காகிததினை(2.5 x 1.8 mt size with 150 gm தடிமன்)சரிசமமாக செங்கலால் கட்டி வைத்த அமைப்பின் மீது விரிக்க வேண்டும்
  5. இதன் மீது 30-35kg நன்கு சளித்த மண்ணை சமமாக பரப்பி விடவும்.இது அசோலாவிற்கு முதன்மை சத்தாக இருக்கும்
கார்பன் மூலப்பொருள்
  • 4-5kg உள்ள 2நாளான பழைய மாட்டு சாணத்துடன் 15-20lit தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கும் போது கார்பன் மூலப்பொருள் உருவாகிறது.
  • 40gms மேக்ரோ நியூட்ரியண்ட் கலவையை(10kg ராக் பாஸபேட்,1.5kgமெக்னீசியம் மற்றும் 20-50gm முரைட் பொட்டாஷ்)கார்பன் மூலப்பொருளுடன் கலந்து அசோலா படுக்கையில் போட வேண்டும்.இந்த கலவையை கலப்பது அசோலா படுக்கையில் போடுவதற்கு முன்பு செய்தால் போதும்.
நீர்ப் பாய்ச்சுதல்
  1. குழியில் 7-10cm அளவு தண்ணீர் இருக்க வேண்டும்.குளியலறையிலிருந்து வரும் தண்ணீர் அல்லது கால்நடைகள் பராமரிக்கும் அறையிலிருந்து வரும் தண்ணீர் மற்றும் துணி துவைத்து அலசிய 2வது தண்ணீர் என எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
  2. 1-1.5kg சுத்தமான செயற்கையாக உண்டாக்கப் பட்ட தாய்அசோலா விதையை தண்ணீர் மட்டத்திற்கு மேல் பரப்பி விடவேண்டும்.அதற்கு முன்பு ஏற்கனவே அதிலுள்ள மண் மற்றும் தண்ணீரை நன்கு கலக்கி விடவேண்டும்.நோய் தடுப்பு முறைகளை செய்த பிறகு,உடனடியாக தூய நீரினைத் தெளிக்க வேண்டும்
  3. ஒரே வாரத்தில் அசோலா படுக்கை முழுவதிலும் படர்ந்து வளர்ந்திருக்கும்
  4. 7வது நாளிலிருந்து தொடர்ந்து எல்லா நாட்களிலும் அறுவடை செய்யலாம்
  5. இதற்கு பிளாஸ்டிக் சல்லடை அல்லது அடியில் ஓட்டை உள்ள தட்டு பயன்படுத்தி அறுவடை செய்யலாம்
  6. மாட்டு சாணம்,தாது உப்புகளானது 7நாட்களுக்கு ஒரு முறை மாற்றி,மாற்றி கொடுக்கவும்
  7. அறுவடை செய்யப்பட்ட அசோலாவை நன்கு தண்ணீரால் கழுவி பயன்படுத்த வேண்டும்.அப்பொழுது தான் சாணத்தின் வாசனை போகும்
கலப்பு விகிதம்
  1. இப்படி பெறப்பட்ட அசோலாவை1:1 என்ற அளவில் நாம் ஏற்கனவே கொடுத்துக் கொண்டுள்ள உணவுடன் தரலாம் அல்லது இதை மட்டும் நேரடியாகவும் தரலாம்.
  2. இது போல் அசோலாவைக் கொடுக்கும் போது கால்நடைகளானது 10-12% பால் அதிகமாகக் கறக்கிறது.
  3. மேலும் இதன் மூலம் விவசாயிகளுக்கு 20-25% சேமிப்பும் கிடைக்கிறது.
மற்ற பயன்கள்
  • பறவைகளுக்கு இதனைக் கொடுப்பதால் அதன் நிறை அதிகரிக்கிறது
  • 2kg அசோலா படுக்கையிலுள்ள மண்ணான்து 1kg NPK உரமாக வரும் 6மாதங்களுக்குப் பயன்படும்

No comments: