Tuesday, 19 May 2009

ஷேர் மார்க்கெட்

சில வரையருக்கப்பட்ட கம்பெனிகள் எனப்படும் நிறுவணங்கள்,ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு, பொது மக்களிடமிருந்து பணத்தை முதலீடாகப் பெற பங்குகள்எனப்படும் ஷேர்களை விற்பார்கள்.ஒவ்வொரு ஷேருக்கான விலையையும் அவர்களே நிர்ணயித்திற்பார்கள். கம்பெனிகளில் இரண்டு வகை உள்ளது
  1. பிரைவேட் லிமிடெட் கம்பெனி
  2. பப்ளிக் லிமிடெட் கம்பெனி
இந்த வகையில் வரும் கம்பெனிகள் சிலவற்றை,பங்கு சந்தையில் லிஸ்ட் செய்திருப்பார்கள்.இவ்வாறு லிஸ்ட் செய்யப்பட்ட பங்குகளை யாரும் வாங்கலாம்,விற்கலாம். இந்தியாவின் பங்கு சந்தையிகளில் மும்பை பங்கு சந்தை(BSE) ,தேசிய பங்கு சந்தை(NSE) ஆகிய இரண்டும் முக்கியமானவை ஆகும்.
ஷேர் டிரேடிங்(share trading)

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை விலைக் குறைவான நேரத்தில் வாங்கி பின் நமக்கு சரியான நேரத்தில் நல்ல விலை வரும் போது கொஞ்சமாகவோ,மொத்தமாகவோ விற்றுவிடலாம்.மீண்டும் அந்த பணத்தை வேறு ஏதாவது பங்குகளை வாங்குவதற்கோ அல்லது அதே பங்கினை வாங்குவதற்கோ பயன்படுத்தலாம்.இதுவே ஷேர் டிரேடிங் ஆகும்.

No comments: