கோமாரி நோய் மாடு, ஆடு, பன்றி முதலிய கால்நடைகளைத் தாக்கி மிக அதிக அளவிலான பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கொடிய தொற்று நோயாகும். நம் நாட்டில் இந்நோய் ஏற்படுவதால் கால்நடை உபபொருட்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. மேலும் கால்நடை உரிமையாளருக்கு கால்நடைகளின் நிரந்தர பயன்பாடான பால் உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால் அதிக நட்டத்தினை ஏற்படுத்துகிறது.
கோமாரி நோயின் அறிகுறிகள் என்ன?- மிக அதிக காய்ச்சல்
- சோர்ந்து காணப்படுதல்
- பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாய், கால் குளம்புகளின் இடைவெளி மற்றும் பால் மடியில் கொப்புளங்கள் தோன்றுதல்
- பாதிக்கப்பட்ட கால்நடைகள் நாக்கினை நீட்டியபடி வாயில் நுரையுடன் கூடிய எச்சில் ஒழுக்குதல்
- கால் குளம்புகளில் புண்கள் இருப்பதால் கால் நொண்டி நடத்தல்
- சமீப காலங்களில் இந்நோயானது பாலூட்டும் இளங்கன்றுகளின் இதயத்தினை தாக்கி அதிக இறப்பினை ஏற்படுத்துகிறது
- நோயுற்ற கால்நடைகளிலிருந்து மற்ற கால்நடைகளுக்கு காற்றின் மூலமாக பெரும்பாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ள நேரங்களில் இந்நோய்க்கிருமி பரவுகிறது
- இந்நோய் தீவனம், பண்ணையில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றின் மூலமும் பறவைகள், நாய் மற்றும் இதர விலங்குகளின் நடமாட்டத்தின் மூலமும் எளிதாகவும் மிக விரைவாகவும் பரவுகிறது
- பாதிக்கப்பட்ட கறவை மாடுகள் கன்றுகளுக்கு பாலூட்டும் போது கன்றுகளுக்கு இந்நோய் பரவுகிறது
- செம்மறியாடுகள் மற்றும் பன்றிகள் இந்நோய்க்கிருமியினை மாடுகளுக்கு பரப்புவதில் அதிக பங்கு வகிக்கின்றன
- கலப்பின மாட்டினங்கள் (ஜெர்சி, ஃபிரிசியன்) நம்நாட்டு மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன
- கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்வதின் மூலம் இந்தோய் எளிதில் பரவுகிறது
- பாதிக்கப்பட்ட மாடுகளில் மூச்சிரைப்பு ஏற்பட்டு உற்பத்தி திறன் குறைதல்
- கறவை மாடுகள் எளிதில் மடி வீக்க நோயினால் பாதிக்கப்படுதல்
- கறவை மாடுகள் சினை பிடிப்பது கடினமாதல்
- சினை மாடுகளில் கன்று வீசிவிடுதல்
- பால் உற்பத்தி குறைந்து மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்துதல்
- காளை மாடுகளில் இனவிருத்தி திறன் குறைதல்
- ஒரு சதவிகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கொண்டு நோயுற்ற கால்நடைகளின் வாய் மற்றும் கால் புண்களை கழுவவேண்டும்
- வாய் புண் மீது போரிக் அமிலம் கிளிசரின் களிம்பினையும், கால் புண்களின் மீது ஆன்டிசெப்டிக் களிம்பினை தடவ வேண்டும்
- நோய் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகளை நோய் தாக்கியுள்ள பகுதிக்கு ஓட்ட செல்லக்கூடாது
- நோய் தாக்கியுள்ள பகுதிகளிலிருந்து கால்நடைகளை வாங்கக்கூடாது
- புதிதாக கால்நடைகளை வாங்கும் போது அவற்றினை 21 நாட்களுக்கு மற்ற கால்நடைகளிலிருந்து தனியே கட்டி பராமரிக்க வேண்டும்
- ஒரு பகுதியிலுள்ள அனைத்து மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு கோமாரி நோய்க்கு ஒருங்கிணைந்த முறையில் தடுப்பூசி போட வேண்டும்
- கன்றுகளுக்கு முதலாவது தடுப்பூசி நான்காவது மாத வயதிலும் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஐந்தாவது மாத வயதிலும் பிறகு ஒவ்வொரு நான்கு முதல் ஆறு மாதத்திற்கொரு முறை பூஸ்டர் தடுப்பூசி தவறாமல் போட வேண்டும்
No comments:
Post a Comment