Monday 1 December 2008

நேர்முகத் தேர்விர்கான விண்ணப்பம் தயாரிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் என்பது,உங்களின் திறமைகளையும்,தரத்தையும்,சாதனைகளையும் எழுத்து மூலமாக அந்த நிறுவணத்திற்கு தெரியப்படுத்த உதவும் மிகச் சிறந்த ஒரு கருவியாகும். இதனை தயாரிக்கும் போது நம் திறமைகளை மடுமல்லாமல் எதிர் காலத்தில் அந்த நிறுவணத்தின் வளர்ச்சியில் நம் பங்கு எவ்வாறு இருக்கும் என்றும் எழுதலாம்.நீங்கள் எந்த விதத்தில் அந்த நிறுவணத்திற்குப் பொருத்தமாக இருப்பீர்கள் என்றும் எழுத வேண்டும். வேலைக்கு எடுப்பவரின் தேவைக்கு ஏற்பவும்,வேலைக்கான தலைப்புடனும் படிவம் தயாரிக்க வேண்டும்.விண்ணப்பப் படிவமானது, தேர்ந்தெடுப்பவரைக் கவரும் விதத்தில் தனித்துவமாக இருக்க வேண்டும்.விண்ணப்பத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போதே உங்களின் ஆர்வம் மற்றும் தரம் புரிய வேண்டும்.அந்த வேலையானது உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருப்பின் உங்களின் முழு ஈடுபாட்டையும்,அது தொடர்பான திறமைகளையும்,அனுபவத்தையும் எழுதலாம்.இதற்கு முன் பார்த்த வேலையையும், அங்கிருந்த நிலையையும் எழுதலாம்.முடிந்த அளவிற்கு அதற்கான சான்றுகளையும் இணைக்கலாம். எல்லாவறறிற்கும்மேலாக உங்களின் படிவத்தைப் பார்க்கும் போதே தேர்வு செய்பவருக்கு ஒரு ஆச்சரியமாகவும்,உங்களின் மீது நம்பிக்கையும் வரும் படி படிவத்தைத் தயாரிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்திற்கான மூலப் பொருட்கள்
  • தன்னைப் பற்றிய விவரங்கள்
(முகவரி போன்று உங்களைத் தொடர்பு கொள்ளக் கொடுக்கும் விஷியங்களை விண்ணப்பப் படிவத்தில் மேலேக் கொடுக்கவும்).கீழ்காண்பவை இதில் அடங்கும்
  1. பெயர்
  2. நிலையான முகவரி
  3. நிலையான தொலைப் பேசி எண்
  4. மின்னஞ்சல் முகவரி (Note: Choose an e-mail address that sounds professional.)
நோக்கம்

விண்ணப்பப் படிவத்தில் வேலைக்கான நோக்கம் மற்றும் நீங்கள் எவ்வாறு அந்த வேலைக்கு சிறப்பு தகுதியுடன் உள்ளீர்கள் என்பதைத் தெளிவாக எழுத வேண்டும். தெளிவில்லாமலும், நீளமாகவும் எழுதக்கூடாது.நோக்கத்தைத் தெளிவாக,சுருக்கமாக எழுதவும்.ஒவ்வொரு நிறுவணத்திற்கு ஏற்ப தனித்தனியாகவும் தயாரிக்கலாம்.

சுருக்கவுரை

சுருக்கவுரையில் தெளிவாகவும்,திருத்தமாகவும் உங்களின் தரத்தை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்.அப்பொழுது தான் நீங்கள் மற்றவரை விட தனிச் சிறப்பாகத் தெரிவீர்கள்.இந்த இடத்தில் உங்களின் சொந்த திறமைகள்,தனித் திறமைகள் மற்றும் அடைந்த வெற்றி போன்றவற்றை எழுதலாம்.உங்களின் குணாதிசயங்களையும் எழுதலாம்.மொத்தத்தில் உங்களைப் பற்றியத் தெளிவான நேர்மறையான எண்ணங்களையும்,உங்களைத் தேர்ந்தெடுத்தால் நிறுவணத்திற்கு நன்மை என்று உணரும் படியாக இருக்க வேண்டும்.

அனுபவம் மற்றும் அடைந்த வெற்றிகள்

உங்களின் திறமைகளையும்,சாதனைகளையும் ஒவ்வொன்றாக வரிசைப் படுத்தி எழுதவும்.அந்த நிறுவணத்திற்கு ஏற்ற திறமைகள் இருந்தால் அதனை பெரிய எழுத்தால் எழுதவும்.இவற்றில் நீங்கள் அனுப்பும் வேலைக்கு ஏற்ற திறமைகள் இருப்பின் அதனை பெரிதாக எழுதலாம்.

தொழில் சார்ந்த அனுபவம

முன் அனுபவங்களைப் பற்றி எழுதும் போது, சமீபத்தில் இருந்த வேலையை முன்நிலைப் படுத்தி எழுதவும். பல்வேறு இடத்தில் வேலை பார்த்திருந்தால், அதன் தலைப்பை மட்டுமோ அல்லது சிறிய அனுபவங்களையும் எழுதலாம்.ஒரு வேலை நல்ல அனுபவம் இல்லை என்றாலும் பார்த்த வேலையைத் தன்னார்வமாக செய்ததாக எழுதலாம்.தொடர்ந்து வேலை செய்ததாக இருக்க வேண்டும்.இடைவெளி இருப்பதாக எழுத வேண்டாம்.

கல்வி விபரங்கள்

அடையாளக் குறியீடுகளுடன் வரிசைப் படுத்தி எழுதவும்.

மேற்கோள் காட்டுதல்

மேற்கோள் காட்டுபவரின் பெயரை எழுத வேண்டும் என்பதில்லை.மேற்கோள் காட்டுபவரின் பெயரை தேவையெனில் கொடுக்கலாம்.

கூடுதல் தகவல்கள்

இது தேவையெனில் கொடுக்கலாம்.இதில் சொந்த ஆர்வங்கள்,பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழிகாடியாக இருந்தது போன்றவற்றை குறிப்பிடலாம்.

விண்ணப்பப் படிவம் எழுதும் போது கவணிக்க வேண்டியவை
  • சுருக்கமாகவும்,தெளிவாகவும் எழுதவும்
  • முழுக்க,முழுக்க வேலை சார்ந்ததாக இருப்பது
  • விண்ணப்பப் படிவம் 2 பக்கம் கொண்டதாக இருப்பது நன்று
  • விண்ணப்பப் படிவத்தை முறையாக அமைப்பது
  • அழங்கார வடிவமைப்புகள் ஏதும் தேவையில்லை
  • விண்ணப்பப் படிவத்தைத் தெளிவாகவும்,பார்க்கும் போதே படிக்கத் தூண்டுவதுப் போல் எழுதவும்
  • விண்ணப்பப் படிவத்தை சரிபார்பது
    • ஏதேனும் பிழைகள் உள்ளதா என நீங்களே சரிபார்க்கலாம்
    • உங்களின் நண்பர்களிடம் காட்டியும் சரிபார்க்கலாம்
    • 2அல்லது3 பேரிடம் காட்டும் போது பிழைகள் முழுவதுமாக சரிசெய்யலாம்
    • வேலை சம்பந்தமான ஆலோசனை குழுவிடம் கொடுத்து சரிபார்க்கலாம்
    • அனுப்புவதற்கு முன்பும் விண்ணப்பப் படிவத்தில் உள்ள பொருள் மற்றும் பிழைகளை சரிபார்த்து அனுப்பவும்
    • நல்ல சக்தி மிகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்(உ.ம்வேலையை வெற்றி கரமாக முடித்தல்,செய்து முடிப்பது,கம்பெனிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது போன்றவை)
முடிவுரை
  • விண்ணப்பப் படிவத்தை சரியாக அடுக்கி வைக்க வேண்டும்
  • நன்கு முறையாக தயாரித்து பார்வைக்கு அனுப்புதல்
  • கடைசியாக ஒரு சில கருத்துகளை சொல்லுவது போல் குட்டி வாக்கியங்களை எழுதலாம்(“Hire me. I am the best product”).

No comments: