Monday, 29 December 2008

பட்டர் சிக்கன்

தேவையான பொருட்கள்
  • எலும்பில்லாத சிக்கன் - கால்கிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
  • கடலை மாவு - 1மேஜைக்கரண்டி
  • கான்ஃப்ளார் மாவு - 1/4மேஜைக்கரண்டி
  • உப்பு தூள் -அரை தேகரண்டி
  • மிளகாய் தூள் - அரை தேக்கரன்டி
  • எண்ணெய் -தேவையான அளவு
  • பட்டர் - 50g
  • பச்ச மிளகாய் - 4 பொடியாக அரிந்தது
  • வருத்த சீரக்கதூள் - இரண்டு தேக்கரண்டி
  • டொமேடோ பேஸ்ட்( டின்) - 100 கிராம்
  • முந்திரி பருப்பு -5/6nos(சுடுநீரில் ஊறவைத்து அரைத்து பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும்)
  • சர்க்கரை - ஒரு பின்ச்
  • உப்பு - அரை தேக்கரன்டி
  • நெஸ்லே கிரீம் - அரை டின்
  • கொத்துமல்லி தழை - ஒரு கை பிடி
செய்முறை
  1. சிக்கனை இஞ்சி,பூண்டு பேஸ்ட்,கடலை மாவு,கான்ஃப்ளார் மாவு, உப்பு மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றுடன் சேர்த்து 1மணிநேரம் நன்கு ஊறவைக்கவும்.
  2. பின் அவற்றை எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.
  3. பின் அதே சட்டியில் பட்டர் ஊற்றி உருகியதும் பச்சை மிளகாய்,வருத்த சீரக்கதூள் மற்றும் பொரித்த சிக்கன் ஆகியவற்றை சேர்த்து சிறிது வதக்கவும்.
  4. அதன் பின் டொமேடோ பேஸ்ட்டுடன்(தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உறிந்து வரும் போது எடுத்து,தோலை உறித்து பேஸ்ட் போல் கரைத்து எடுத்துக் கொள்ளவும்).முந்திரிபருப்பு பேஸ்டையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் அதனுடன் ஒரு பின்ச் சர்க்கரையும்,உப்பும் சேர்க்கவும்.
  6. தேவையெனில் டெமேட்டோ கலர் சேர்க்கலாம்.
  7. இப்பொழுது பட்டர்,பேஸ்ட் அனைத்தும் சேர்ந்து நன்கு கொதித்து தொக்கு போல் வர ஆரம்பிக்கும்.அப்பொழுது னெஸ்லே கிரீமையும் இதனுடன் சேர்க்கவும்.
  8. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்தபின்,கொத்துமல்லி தழையைத் தூவி இறக்கவும்.

No comments: