வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.
வெள்ளாட்டு இனங்கள்- ஜம்நாபாரி
- பீட்டல் - பஞ்சாப்
- பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
- தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா
- சுர்தி - குஜராத்
- காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்
- வங்காள ஆடு - மேற்கு வங்காளம்
- ஆல்பைன்
- சேனன்
- டோகன் பர்க்
- அங்கோரா
- ஆங்ளோ நுபியன்
- ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை.
- கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
- வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
- பொருளாதார முதலீடு மிகக் குறைவாகவே தேவைப்படுகிறது. கட்டிட அமைப்பு மற்றும் ஏனைய சாதனங்களுக்கு மிகக்குறைந்த செலவே ஆகும்.
- ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது.
- ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது.
- நல்ல எரு கிடைக்கிறது.
No comments:
Post a Comment