Saturday, 1 November 2008

நீர் பாசனம்(Irrigation)

நீர் பாசனம்

நீர் பாசனம்என்பது,செயற்கையான முறையில் நீரினைப் பயிர்களுக்குப் பாய்ச்சுவதேயாகும்.இவை மூன்று வகைப் படும்.

  • கீழ் புறமான பாசனம்(Sub Irrigation)
  • மேல் புறமான பாசனம்(Surface Irrigation)
  • சரியான இடத்தில் நீர் பாசனம்
கீழ் புறமான பாசனம்(Sub Irrigation)

கீழ் புறமான பாசனம் சில நேரங்களில் கசிவு நீர் பாசனம் என்றும் அழைக்கப் படும்.கீழ் புறமான பாசனம் என்பது,நீரினை வேர்த்தொகுதியிலோ அல்லது வேர்த்தொகுதியின் அருகிலோ நிலத்தின் கீழாக பாய்ச்சுவதாகும்.இதனை நிலத்தின் கீழாகக் குழாய் மூலமாகவும் பாய்ச்சலாம்.இந்த முறையானது கிரீன் ஹவுஸ்,தொட்டி செடி வளர்ப்பு போன்ற முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேல் புறமான பாசனம்(Surface Irrigation)

மேல் புறமான பாசனம் என்பது,நீரினை அப்படியே நிலத்தின் மேல் புறமாகப் பாய்ச்சுவதேயாகும்.இவ்வாறு பாய்ச்சும் போது,புவி ஈர்ப்பு விசையின் மூலம் நீர் நிலத்தில் நன்றாக ஊடுருவி,ஈரப்பதமாக வைக்கிறது.இந்த பாசனமுறையானது இரண்டு வகைப்படும்.அவை

  1. பாத்தி மூலம் பாசன்ம்
  2. தடுப்பு அணை மூலம் பாசனம்
பாத்தி மூலம் பாசனம்(Furrow Irrigation)

பாசன நீரானது,வரிசையாக பாத்தி கட்டப்பட்டு,பாத்தியில் நீரினைத் தேக்கி வைத்துப் பாய்ச்சுவதேயாகும்.

பாசன நீரால் மூழ்க வைக்கும் முறை(Flood Irrigation)

நிலத்தினை(மண்ணை) பாசன நீரால் முழுவதுமாக நிரப்பிப் பாய்ச்சுவதேயாகும்.இதே முறையில் மடையையும்,மற்ற தண்ணீர் வயலில் இருந்து வெளியேறும் இடங்களையும் மண் வைத்து அடைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

புவி ஈர்ப்பு விசை மூலமாக பாசனம்

பாசன நீரானது,குழாய் மூலம் இல்லாமல் அப்படியே தண்ணீரைத் திறந்து விடும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாகத் தானகவே நிலத்தில் பாய்வதேயாகும்.

சுழற்சிப் பாசனம்

பாசன நீரினை தொட்ர்ச்சியாகப் பாய்ச்சாமல்,ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பாய்ச்சுவதாகும்.

சரியான இடத்தில் நீர் பாசனம்

இந்த முறையில் நீரானது,சரியான இடத்தில் சொட்டு நீர் பாசன முறையிலோ,தெளிப்பு நீர் பாசன முறையிலோ பாய்ச்சுவதேயாகும்.இது இரண்டு வகைப்படும்.அவை

  1. சொட்டு நீர் பாசனம்(Drip Irrigation)
  2. தெளிப்பு நீர் பாசனம்(Sprinkler Irrigation)
சொட்டு நீர் பாசனம்

பாசன நீரானது,துளையிடப் பட்ட நீளமான குழாய் மூலமாக,வேருக்கு அருகிலேயே பாய்ச்சுவதேயாகும்.இந்தத் துளையிடப் பட்ட நீளமான குழாயானது நிலத்தின் மேலாகவோ அல்லது நிலத்தின் கீழாகவோ அமைக்கலாம்.

தெளிப்பு நீர் பாசனம்

இந்த முறையில் துளையிடப் பட்ட நீளமான குழாயில் உள்ள முனையில் தெளிப்பான்களைப் பொருத்தி நீர் பாய்ச்ச வேண்டும்.இந்த முறையில் நீரானது செடிகளுக்கு தெளிக்கப் படுகிறது. இந்த மாதிரி தெளிப்பான்களை தேவையான இடங்களில் பொருத்தி நீர் பாய்ச்சலாம்.நடு பைவட் முறை(center pivot system) என்பதும் தெளிப்பு நீர் பாசன முறையை சேர்ந்ததாகும்.

No comments: