Tuesday 13 January 2009

சிக்கன் குழம்பு/மட்டன் குழம்பு

(குறிப்பு:மட்டன் குழம்பு எனில் இதே குறிப்பினைக் கொண்டு சிக்கனுக்கு பதில் மட்டன் சேர்த்து செய்யவும்.) தேவையான் பொருட்கள்
  • சிக்கன்- 1/2 கிலோ(நன்றாகக் கழுவி சுத்தம் செய்தது)
  • தேங்காய் -1/2 மூடி
  • சின்ன வெங்காயம்-10
  • தக்காளி -1
  • இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பட்டை,கிராம்பு,சோம்பு,கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்த தூள்-1/2தேக்கரண்டி
  • சிக்கன் மசாலா தூள்-காரத்திற்கு ஏற்ப
  • எண்ணெய் - ஒன்றரை மேஜைக்கரண்டி
  • கருவேப்பிலை-கொஞ்சம்
செய்முறை
  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் கசகசா இரண்டையும் போட்டு வதக்கவும்.
  2. வதக்கிய வெங்காயத்தை தேங்காயுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் அரை மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சிபூண்டு,பட்டை,கிராம்பு,சோம்பு,கசகசா விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  4. பின் கறிவேப்பிலை,சிக்கன் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  5. பின் உப்பு மற்றும் மஞ்சள்த்தூள் போட்டு நல்ல வாசம் வரும் வரை வதக்கவும்.
  6. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு, சிக்கன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  7. பின் தேங்காய்,வெங்காயம் அரைத்த விழுதில் கொஞ்சம் சேர்த்து நன்கு கலந்துக் குக்கரில் ஒரு விசில் விடவும்.
  8. பின் மீதி உள்ள தேங்காய்,வெங்காய விழுதை சேர்த்துத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டு இறக்கவும்.
  9. இப்பொழுதும் தேவையான அளவு சிக்கன்மசாலாத் தூள் சேர்க்கவும்.
  10. குழம்பு நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

No comments: