சர்க்கரைப் பொங்கல் புளிக் குழம்பு
தேவையானப் பொருட்கள்
- கத்தரிக்காய்-3
- பரங்கிக்காய்-4துண்டு
- வாழைக்காய்-6துண்டு
- அவரைக்காய்-5
- நறுக்கிய சின்ன வெங்காயம்-1கைப்பிடி
- தக்காளி -1
- பச்சை மொச்சைக்காய்-1கப்
- தட்டை பயிறு-1/4கப்
- புளி-1எழுமிச்சை அளவு
- கடலைப் பருப்பு-1தேக்கரண்டி
- உ.பருப்பு-1/4தேக்கரண்டி
- தனியா-1/4தேக்கரண்டி
- வரமிளகாய்-2
- தேங்காய்-1/2மூடி
- கருவேப்பிலை
- கொத்தமல்லி தழை
- உப்பு-தேவைக்கு
- மஞ்சள் தூள்-1பின்ச்
- சாம்பார்த் தூள்-11/2மேஜைக்கரண்டி.
செய்முறை
- தட்டைப் பயிறை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும்.
- பின் தட்டைப் பயிறையும்,பச்சை மொச்சை (இல்லையெனில் காய்ந்த வெள்ளை மொச்சையையும்) சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
- கடலைப் பருப்பு, உ.பருப்பு, தனியா, வரமிளகாய், தேங்காய், கருவேப்பிலை ஆகியவற்றை கொஞ்சம் எண்ணெயில் வறுத்து பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,நறுக்கிய சி.வெங்காயம்,தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பிறகு நறுக்கிய காய்களை சேர்க்கவும்.
- அதனுடன் அரைத்த மசாலாவை ஊற்றி,தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள்,சாம்பார்த் தூள்,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- இதனுடன் வேக வைத்த தட்டைப் பயிறையும்,பச்சை மொச்சையையும் சேர்க்கவும்
- குழம்பு நன்கு கொதித்தவுடன் புளி ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
- கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
No comments:
Post a Comment