Monday, 29 December 2008

சிக்கன் கிரேவி/மட்டன் கிரேவி

(குறிப்பு:மட்டன் கிரேவி எனில் இதே குறிப்பினைக் கொண்டு சிக்கனுக்கு பதில் மட்டன் சேர்க்கவும்.) தேவையானப் பொருட்கள்
  • கோழி - ஒரு கிலோ
  • வெங்காயம் - 150 கிராம்
  • தக்காளி - 150 கிராம்
  • சீரகம்,மிளகு -கொஞ்சம்
  • பூன்டு,இஞ்சி விழுது-1மேஜைக் கரண்டி
  • பட்டை,ஏலம்,கிராம்பு அரைத்த தூள்-1தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • எண்ணை - 150 கிராம்
  • கொத்து மல்லி - அரை கட்டு
  • புதினா - கொஞ்சம்
  • சிக்கன் மசால தூள்-1பாக்கெட்.
செய்முறை
  1. வெங்காயம்,தக்காளியை பச்சையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அரைக்கும் போது அதனுடன் சீரகம்,மிளகையும் சேர்த்து அரைக்கவும்.
  3. எண்ணையை காய வைத்து பட்டை ஏலம்,கிராம்பு போட்டு வெடித்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சவாடை போகிறவரை வதக்கவும்.
  4. பிறகு கொத்து மல்லி, புதினா சேர்க்கவும்.
  5. பிறகு அரைத்த வெங்காயம், தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சைவாடை போகிறவரை சிம்மில் வைத்து வதக்கவும்.
  6. சரியான அளவு வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்க்கவும்.
  7. எண்ணெய் பிரிந்து வந்த பிறகு சிக்கன் மசாலா தூள்,மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு போட்டு வதக்கவும்.
  8. பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும்,நல்ல சிம்மில் வைத்து கிரேவி பதம் வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
  9. மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

2 comments:

velu said...

Dear friend

Nice chicken greavy but you forget to add chicken in to the gravey.
Velu

Vedha Parasu said...

Mr.Velu
Thank you very much for your comment.Now, i include what you mentioned.