Sunday, 28 December 2008

கோபி மஞ்சூரியன்

தேவையானப் பொருட்கள்
  • காலிஃபிளவர் - ஒன்று
  • பெரிய வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 2
  • கார்ன்ஃப்ளார் -4 மேஜைக்கரண்டி
  • மைதா மாவு-2மேஜைக்கரண்டி
  • முட்டை-1
  • தக்காளி சாஸ்-3மேஜைக்கரண்டி
  • சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
  • அஜினோமோட்டோ-1பின்ச்
  • மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
  • உப்பு -தேவைக்கு
  • எண்ணெய் -பொரிக்கத் தேவையான அளவு
  • கொத்தமல்லி - ஒரு கொத்து
செய்முறை
  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து காலிஃபிளவரை அதில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுக்கவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டை அடிக்கும் கருவியால் நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும்.
  4. மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃபளார், அஜினோமோட்டோ, உப்பு கால் தேக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரை முதலில் அடித்து வைத்துள்ள முட்டை கருவில் தோய்த்து எடுத்து, பிறகு கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.காலிபிளவர் லைட் பிரெளன் ஆனதும் எடுத்து விடவும்.
  6. வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
  7. அதனுடன் பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.அதன் பிறகு தக்காளி சாஸ் ஊற்றி உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளறவும்.
  8. பிறகு பொரித்து வைத்திருக்கும் காலிஃபிளவர் துண்டங்களை ஒவ்வொன்றாய் வாணலியில் போடவும்.மசாலாவுடன் நன்கு சேருமாறு துண்டங்களை போட்டு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.
  9. கடைசியாகப் பொடியாக நறுக்கின கொத்தமல்லித் தழை தூவவும்.

No comments: