Tuesday, 13 January 2009

மீன் கிரேவி

தேவையானப் பொருட்கள்
  • மீன் -1/2கிலோ
  • சின்னவெங்காயம்-1கப்
  • தக்காளி-2
  • புளி-எழுமிச்சை பழம் அளவு
  • மிளகு-சிறிது
  • வெங்காய வடகம்(தாளிப்பு வடகம்)-1
  • மஞ்சள்தூள்-1/2தேக்கரண்டி
  • சாம்பார்த் தூள்-11/2 மேசைக்கரண்டி
  • பூண்டு-5பல்
  • உப்பு-தே.அளவு
  • நல்லெண்ணெய்-2மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை-3கொத்து
  • கொத்தமல்லி தழை--கொஞ்சம்
செய்முறை
  1. மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காய வடகம்,மிளகு,பூண்டு ஆகியவற்றை சேர்த்து வெடித்த உடன் கருவேப்பிலைப் போடவும்
  3. பிறகு வெங்காயம்,தக்காளியை நன்கு அரைத்து சேர்க்கவும்.
  4. உப்பு,மஞ்சள் தூள் போடவும்
  5. பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  6. பிறகு சாம்பார் தூள் சேர்க்கவும்.
  7. எண்ணெய் பிரிந்து வந்த பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. பிறகு புளி கரைசலை சேர்த்து குழம்பை நன்கு கொதிக்கவிடவும்
  9. கடைசியாக மீனை ஒவ்வொன்றாக சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து தவாவை மூடி ஒரு 10நிமிடம் வைக்கவும்.இப்பொழுது நன்கு எண்ணெய் மிதந்து கிரேவி போல் வந்து விடும்.
  10. பிறகு அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை கொஞ்சம் தூவி இறக்கவும்.

No comments: