சைனீஸ் சிக்கன் பிரை
தேவையானப் பொருட்கள்
- கோழி - எலும்பில்லாதது
- பெரிய வெங்காயம் - 2
- மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
- சோளமாவு - 3 மேசைக்கரண்டி
- சோயா சாஸ் - ஒரு கப்
- வினிகர் - அரை கப்
- அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
- மைதா - 2 மேசைக்கரண்டி
- டால்டா - பொரிப்பதற்கு
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி
செய்முறை
- கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சாஸ், வினிகர், அஜினோமோட்டோ, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு ஊறவைத்த கறியை ஒரு குக்கரில் வைத்து அரை வேக்காடு வேக வைக்கவும்.
- பின் சோள மாவையும், மைதா மாவையும் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- வெந்த கறித்துண்டுகளை எடுத்து மாவில் தோய்த்து, வாணலியில் காயும் டால்டாவில் போட்டு பொரித்து சிவந்ததும் எடுக்கவும்.
No comments:
Post a Comment