Tuesday, 13 January 2009

க்ரீன் சிக்கன்

தேவையானப் பொருட்கள்
  • சிக்கன் - கால் கிலோ
  • வெங்காயம் - ஒன்று
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு - 1 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி - 2 கொத்து
  • புதினா - 2 கொத்து
  • பச்சை மிளகாய் - 4
  • சோம்பு,பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய்-தாளிக்க தேவையான அளவு
  • இஞ்சி,பூண்டு விழுது -11/2 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - அரை கப்
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை
  1. சிக்கனை கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ளவும்.
  2. இஞ்சி, பூண்டு இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  4. கொத்தமல்லி, புதினா இரண்டையும் தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும்.
  5. மிக்ஸியில் கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
  6. பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  7. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு,சோம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  8. அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது போட்டு 2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  9. அதன் பின் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.
  10. பின் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கி பின் உப்பு போடவும்.
  11. பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக வரும் வரை கொதிக்க விடவும்.
  12. சிக்கன் நன்கு வெந்து, தண்ணீர் சுண்டியதும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும.

No comments: