Friday 2 January 2009

லெக் பீஸ்/லாலி பாப்சிக்கன் பிரை

தேவையான பொருட்கள்
  • சிக்கன் லெக் பீஸ் - பத்து
  • எலுமிச்சை - இரண்டு
  • மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
  • உப்பு தூள் - இரன்டு தேக்கரண்டி
  • சிக்கன் 65 மசாலா - இரண்டு தேக்கரண்டி
  • பிரெட் கிரெம்ஸ் - கால் கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரரண்டி
  • பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம், மிளகு,தனியாத் தூள் -1/2மேசை கரரண்டி
  • கருவேப்பிலை கொத்து மல்லி - சிறிது
  • சோளமாவு - 1/2 மேசைகரண்டி
  • கடலை மாவு -1மேசைகரண்டி
  • எண்ணை -கால் கப்( பொரிக்க)
செய்முறை
  • முதலில் சிக்கனை தோலெடுத்து அதை நன்கு கழுவி அதில் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்து பத்து நிமிடம் ஊறவைத்து கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
  • அதில் பாதி உப்பு, பாதி சிக்கன் மசாலா, ஒரு எலுமிச்சை சாறு,பாதி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல பிசறி குக்கரில் இரண்டு விசில் விட்டு இரக்கி அதில் இருக்கும் தண்னீரை வடித்து விடுங்கள்.
  • அதனுடன் மீதி உள்ள சிக்கன் மசாலா,மிள்காய் தூள்,சோள மாவு, கடலை மாவு,உப்பு போட்டு கருவேப்பிலை, கொத்துமல்லியை பொடியாக அரிந்து போட்டு கிரெம்ஸ் பவுடரையும் சேர்த்து நன்கு பிசறி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • சிக்கன் 65மசாலாத் தூள் இல்லையெனில் மிளகாய்த் தூளுடன் சிறிது ரெட் கலர் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.
  • நன்கு ஊறிய பின் கிடாயில் எண்ணை விட்டு பொரித்து எடுக்கவும்.

No comments: