(குறிப்பு:மட்டன் பிரியாணி எனில் இதே குறிப்பினைக் கொண்டு சிக்கனுக்கு பதில் மட்டன் சேர்க்கவும்.)
தேவையானப் பொருட்கள்
- சிக்கன் -1/2கி
- பாசுமதி அரிசி -1/2கிலோ
- வெங்காயாம் -1
- தக்காளி -1
- ப.மிளகாய் -5
- மிளகாய்த்தூள் -1தேக்கரண்டி
- ம.தூள் -1/2ஸ்பூன்
- தேங்காய்ப்பால் -1கிளாஸ்
- எண்ணை -100கி
- நெய் -3மேஜைக்கரண்டி
- புதினா,கொத்தமல்லித்தழை-தேவைக்கு
- இஞ்சி, பூண்டு விழுது-3தேக்கரண்டி
- ஏலக்காய் -2
- பட்டை -2
- அன்னாசி மொக்கு,பிரியாணி இலை -1
- சோம்பு -1ஸ்பூன்
- உப்பு -தேவையானது
செய்முறை
- ஏலக்காய்,சோம்பு, பட்டை ஆகியவற்றை தூளாக்கவும்.
- 3ப.மிள்காயை இஞ்சி பூண்டுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பத்திரத்தில் எண்ணை மற்றும் நெய் சேர்த்து இஞ்சி,பூண்டு விழுதுடன் பட்டை,சோம்புத் தூளையும் போட்டு வதக்கவும்
- பின் வெங்காயத்தை வதக்கி,தக்காளி, ப.மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கிப் பின் புதினா, கொத்தமலித்தழை சேர்த்து கிளறவும்
- இப்பொழுது சிக்கனை சேர்த்து வதக்கவும்.
- பின் அரிசியை சேர்த்து 2நிமிடம் கிளறவும்.
- பிறகு 1கிளாஸ் தேங்காய்ப்பாலுடன் 2-1/2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் சிறுதீயில் மூடிவைக்கவும்.
- 3/4பதம் வெந்தவுடன் நெய் ஊற்றி கிளறி மூடி வைக்கவும்.
- சிறிது நேரத்தில் மறுபடியும் கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அருமையான சிக்கன் பிரியாணி ரெடி.
No comments:
Post a Comment