சிக்கன் மஞ்சூரியன்
தேவையானப் பொருட்கள்
- கோழி - 1/4 கிலோ
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
-
- சோளமாவு -6 ஸ்பூன்
-
- மைதா மாவு - 1 ஸ்பூன்
-
- சிகப்பு மிளகாய் சாஸ் - 4டேபிள்ஸ்பூன்
-
- முட்டை - 1
-
- எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
-
- உப்பு - 1 ஸ்பூன்
-
- பெரிய வெங்காயம் - 1
-
- பூண்டு பல் - 15
-
- பச்சை குடைமிளகாய் - 1
-
- சிக்கன் (மேக்கி) க்யூப் - 1/4 க்யூப்
-
- தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
-
- சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
-
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
-
- உப்பு -தேவைக்கு
-
- வெங்காயத்தாள் அல்லது கொத்தமல்லி தழை - சிறிது
-
செய்முறை
- முதலில் எலும்பு நீக்கிய சிக்கன் தூண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
- முட்டையை கலக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு,சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்க்கவும்.
- இந்த கலவையை கட் பண்ணி வைத்துள்ள சிக்கனில் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பிறகு அவற்றை பொன்னிறமாக மெதுவான தீயில் பொரித்து எடுக்கவும்.
- ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், மேக்கி க்யூப் அனைத்தையும் போட்டு கிளறவும்.
- சோளமாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிகறியையும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாளையும் சேர்த்து 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும்.
- பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து புரட்டிவிட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment