Monday, 17 November 2008

குறைந்த செலவிலான மரத்தாலான பசுமையகம்

  • பசுமையகம் பற்றி
  • 35 அடி X 20 அடி அளவிலான மரத்தாலான பசுமையகம் அமைப்பதற்கான முறை
  • குறையடர்த்தி நெகிழி படலம் கொண்டு மூடப்படும் 35 அடி x 20 அடி மரக்கட்டையிலான பசுமையகம் கட்டுவதற்கான முறை :
  • பசுமையகம் பற்றி
  • பசுமையக தோட்டக்கலையின் மூலம் மாறுபட்ட பருவங்களில் பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி செய்யமுடியும். மரபுவழி தோட்டகலையை விட பசுமையகங்களின் மூலம் அதிமாக மகசூல் பெறமுடியும். தோட்டக்கலைப்பயிர்களை மாற்றுப்பருவங்களில் வளர்ப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இல்லாத போது பசுமையகத்தை பயன்படுத்தலாம். ஆண்டு முழுவதற்கும் பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக விநியோகம் செய்வதற்கு பசுமையகம் உறுதியளிக்கிறது. பசுமையகம் என்பது ஒளி ஊடுருவக்கூடிய குறையடர்த்தி நெகிழி படலம் (LDPE) அல்லது பாலிகார்பனேட் ஷீட்டுகள் கொண்டு மூடப்பட்ட கட்டமைப்புகள் ஆகும். இவை சூரிய கதிர்வீச்சுக்களை மட்டும் ஊடுறவ விட்டு, பசுமையகத்தினுள் வெளியாகும் வெப்ப கதிர்வீச்சுகளை உள்ளடக்கிக் கொள்ளும் தன்மையுடையவை. இதன் மூலம் செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்க முடியும். சூரியனிடம் பெற்ற ஆற்றல் சக்தி வெப்பமாக பசுமையகத்தில் மாற்றப்படுகிறது. பயிர் வளர்ச்சியை பாதிக்கும் வெவ்வேறு காரணிகளான ஒளி, வெப்பம், கரியமில வாயு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை பசுமையகத்தில் முறையாக கட்டுப்படுத்தலாம். அடிப்படைக் கட்டமைப்புக்கான செலவுகள், நாம் எந்த வகை பொருட்களை, அதாவது இருக்கமான பொருளையா அல்லது வளைவான பொருளையா என்பதை பொருத்து அமையும். உதாரணமாக பைப், G.S. ஆங்கிள், நார்க்கண்ணாடியுடன் கூடிய பாலியெஸ்டர் கண்ணாடிகள், அக்ரலிக் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். மேலும் அடிப்படை கட்டமைப்போடு மட்டுமல்லாமல் எந்த வகையான பொருளை மூடுவதற்காக பயன்படுத்த உள்ளோம் என்பதை பொருத்தும் செலவுகள் அமையும். மேலே கூறியபடி அதிக செலவிலான பொருட்களைக் கொண்டு அமைக்கப்படும் பசுமையகங்கள், சராசரி இந்திய விவசாயிகளின் பொருளாதார வசதிக்கு அப்பாற்பட்டனவையாக உள்ளன. இந்த பிரச்சனைகளை தவிர்க்க விவசாயிகளின் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு குறைந்த செலவிலான மரத்தாலான பசுமையகம் வடிவமைக்கப்பட்டு வயல்வெளி சோதனையும் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புகளில் அட்டைகள், புற ஊதாக் கதிர் தடுப்புள்ள குறையடர்த்தி நெகிழி படலம், நிழல் வலைகள் போன்ற எந்த விதமான மூடு பொருட்களையும் பயன்படுத்தலாம். வெவ்வேறு வேளாண் செயல்களை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு அதிக இடைவெளியுடன் கூடிய பசுமையகத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிட்டுள்ளோம். இச்சுழலில் உற்பத்தி செய்யப்பட்ட செடிகளை ஆராய்ந்து பார்த்ததின் மூலம், இவை குறு மற்றும் சிறு சில விவசாயிகளுக்கு ஏற்றைவையாக அமையும் எனத் தெரியவந்துள்ளது. மேலும் பசுமையகத்தின் மூலம் அதிகமான மகசூல் கிடைப்பேதாடு மட்டுமல்லாமல், மாற்றுப்பருவங்களில் காய்கறியும் உற்பத்தி செய்யமுடிகிறது.

  • 35 அடி X 20 அடி அளவிலான மரத்தாலான பசுமையகம் அமைப்பதற்கான முறை
  • தேவைப்படும் பொருட்கள்
    • மரத்தூண்கள்
    • மரத்தூண்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பசுமையகத்தின் பலம் இத்தூண்களைப் பொருத்து அமையும். யூகலிப்டஸ் தூண்களில் எறும்பு மற்றும் கரையான் தாக்கம் மிக மிக குறைவாக இருப்பதால், சவுக்கு மரத்தை காட்டிலும் யூக்கலிப்டஸ் மரத்தை தேர்வு செய்யலாம். மேலும் இம்மரங்கள் பலமாக இருப்பதால் ஆணி அடிக்கும் போது தோல் உறியாமல் நன்கு இறங்குகிறது.
      இரு அளவிலான மரத்தூண்களை உபேயாகிக்க வேண்டும். ஒன்று அதிமான (7 - 10 செ. மீ) விட்டம், மற்றொன்று 5 செ.மீ விட்டமாக இருக்க வேண்டும். கூரைப்பகுதிகளுக்கு பெரிய விட்ட தூண்களையும், ஏனைய பக்கபல வடிகங்களுக்கு சிறிய அளவிலான தூண்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
      தேவைப்படும் மரத்தூண்களின் எண்ணிக்கை பெரிய விட்டத் தூண்கள் - 21 சிறிய விட்டத் தூண்கள் - 34 மொத்த மரத்தூண்களின் எண்ணிக்கை - 55

    • G.I. ஒயர்
    • 4 மிமீ விட்டம் உடைய ஜி.ஐ. ஒயர்கள் (மூங்கில் குச்சிகளை கூரையுடன் இணைத்து கட்டுவதற்கு). ஜி.ஐ. ஒயரின் மொத்த எடை : 2 கிலோ

    • ஆணிகள்
    • மரத்தூண்களை பக்க தூண்களுடன் இணைக்கவும், மரத்தூண்கள் இணைப்புகளில் ஆணி அடிக்கவும் நீளமான ஆணிகள் தேவை. 7 செ.மீ நீளமுள்ள ஆணிகள் : 3 கிலோ

    • புற ஊதா கதிர்வீச்சை தடுக்கும் குறையடர்த்தி நெகிழி படலம் (LDPE)
    • எந்த வகையான பசுமையகங்களுக்கும் மூடு பொருளாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். குறையடர்த்தி நெகிழி படலங்களையே தற்பொழுது உலகளவில் எல்லா பசுமையகத்திலும் பயன்படுத்துகின்றோம். மேலும் இவை குறைந்த செலவுடையனதாகவும், அமைப்பதற்கு எளிமையாகவும் இருக்கும். இந்தியாவில் குறையடர்த்தி நெகிழி படலத்தை (LDPE) இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது (IPCL). மரக்கட்டையிலான பசுமையகத்திற்கு மூடு பொருளாக பயன்படுத்துவதற்கு இவை மிகவும் ஏற்றவையாகும்.
      தேவைப்படும் மொத்த படலத்தின் அளவு
      தரையளவின் பரப்பளவை விட 2.48 மடங்கு அதிகமான அளவு LDPE தேவைப்படும். உதாரணமாக 35அடி x 20 அடி = 700 சதுர அடி பசுமையகம் அமைக்க 1736 சதுர அடி புறஊதா கதிர் தடுப்புத்திறன் கொண்ட படலம் தேவைப்படும். இதன் எடை சுமார் 30 கிலோவாகவும், தடிமன் 200 மைக்ரானாகவும் இருக்க வேண்டும்.

    • நிலக்கரி தார் / பிட்டுமின் - 2 லிட்டர்
    • LDPE சுருள் (10 செ. மீ தடிமன்)
    • சாதாரண குறையடர்த்தி நெகிழி படலம் (10 செ.மீ) கொண்டு மரத்தூண்கள், இணைப்புகள், ஒயர்கள் ஆகியற்றை மூடி, அவை புறஊதா கதிர் தடுப்பான் குறையடர்த்தி நெகிழி படலத்துடன் நேரடியாக படுவதை தடுக்க முடியும்.
      தேவைப்படும் மொத்த அளவு - 3 கிலோ

    • பிளாஸ்டிக் கயிறு
    • வேகமான காற்று விசையிலிருந்து காப்பதற்காக, LDPE படலங்களை கட்டமைப்புகளுடன் இணைத்து கட்டுவதற்கு பிளாஸ்டிக் கயறுகள் பயன்படுகின்றன.
      தேவைப்படும் பிளாஸ்டிக் கயிற்றின் அளவு - 5 கிலோ

    • மூங்கில் குச்சிகள்
    • குறையடர்த்தி நெகிழி படலங்களை விரிப்பதற்கு எளிதாக இருப்பதற்காக மேலும் கீழுமாக கட்டுவதற்கு மூங்கில் குச்சிகள் தேவைப்படுகிறது.
      தேவைப்படும் மூங்கில் குச்சியின் அளவு - 30 கிலோ

    • கோர்ப்பு ஆணிகள்
    • ரப்பர் வாஷருடன் சேர்த்து, LDPE படலங்களை மரக்கட்டமைப்பில் இணைக்க கோர்ப்பு ஆணிகள் பயன்படுகிறது.
      படலங்களை மரத்தூண்களுடன் சேர்த்து சீராக பொருத்துவதற்கு இந்த ஆணிகள் பயன்படுத்தப்படுகின்றன.
      தேவைப்படும் கோர்ப்பு ஆணிகள் அளவு (1 இஞ்ச் நீளம்) - 250 கிராம்

  • குறையடர்த்தி நெகிழி படலம் கொண்டு மூடப்படும் 35 அடி x 20 அடி மரக்கட்டையிலான பசுமையகம் கட்டுவதற்கான முறை :
  • பசுமையகத்திற்கான இடம் தேர்வு செய்தல் மற்றும் அமைப்பு :

    பசுமையகம் நன்கு செயல்பட ஏற்ற சூழலை உருவாக்க தேர்ந்தெடுக்கப்படும் இடம் மிக முக்கியம். மேலும் மழைக்காலங்களில் தேங்கும் நீரை அப்புறப்படுத்துவதற்கு ஏற்ப நல்ல வடிகால் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
    பொருட்களை பசுமையகத்திலிருந்து எடுக்கவும், வைக்கவும் எளிதா வழி முறைகளை கையாள வேண்டும். பசுமையகம், விற்பனை கூடத்திற்கு அருகில் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். பசுமையகம் அமைக்கப்படும் இடத்தில் நல்ல தரமான தண்ணீர் வசதி இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
    மரங்கள் மற்றும் கட்டிடங்களுக்கும் அருகில் இல்லாமல், சூரிய ஒளியை தடுக்காதவாறு, பசுமையகத்தை அமைக்க வேண்டும்.
    கிழக்கு மேற்காக பசுமையகத்தை அமைக்கும் பொழுது, குளிர் காலங்களில் நல்ல ஒளியளவை பராமரிக்க முடியும். தெற்கு வடக்கு திசையைக் காட்டிலும் இதுவே உகந்ததாகும்.
    மேலும் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பொருத்து நாம் பல காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். காற்றின் திசை, எவ்வளவு காற்று தடுப்பான்கள் உள்ளன என்பதையும், ஆண்டு முழுவதற்கும் கிடைக்கக்கூடிய சூரிய ஒளியின் அளவைப் பொருத்தும் நாம் பசுமையகத்தின் அமைப்பை தீர்மானம் செய்ய வேண்டும்.

    1. பெரிய விட்ட மரத்தூண்களை எடுத்து (பிட்டுமின்) தடவ வேண்டும். பாலிபுரோபலினின் துணையோடு மரத்தூண்களை LDPE யுடன் சுற்ற வேண்டும். இதனை கரையான் தாக்கத்திலிருந்து தடுப்பதற்காக செய்ய வேண்டும்.
    2. கீழ்க்கண்ட படத்தில் கொடுத்திருப்பது போல் பசுமையகம் கட்டுவதற்கு வெவ்வேறு அளவிலான சவுக்கு தூண்களை கொத்து வடிவம் போன்று அமைக்க வேண்டும்.
    3. மூங்கில் தூண்கள் கொண்டு மேற்பரப்பை நிரப்ப வேண்டும்.
    4. பசுமையகத்தின் நீளவாக்கில் 0.2 மீ x 0.2 மீ என்ற அளவில் குழி தோண்ட வேண்டும். புறஊதா கதிர் தடுப்பான் குறையடர்த்தி நெகிழி படலத்தின் விளிம்புகளை புதைப்பதற்கு, குழி எடுத்த மண்ணை உபேயாகப்படுத்தலாம். பாறாங்கற்கள், கூர்மையான பொருட்கள் போன்றவை இம்மண்ணில் இருத்தல் கூடாது.
    5. புற ஊதா கதிர் தடுப்பான் குறையடர்த்தி நெகிழி படலங்களுடன் நேரடியாக தொடர்பு ஏற்படாதவாறு மரத்தூண்களை சாதாரண குறையடர்த்தி நெகிழி படலங்கள் கொண்டு சுற்ற வேண்டும். மரத்தூண்களில் உள்ள கூர்மையான பகுதிகளும் மரப்பட்டையிலிருக்கும் ரெசின்களும் புறஊதா தடுப்பான் படலங்களை பாதிப்பதிலிருந்து தடுப்பதற்காக இதனை செய்ய வேண்டும்.
    6. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் மரத்தூண்கள் இணையும் பகுதிகளில் சாதாரண குறையடர்த்தி நெகிழி படலங்கள் கொண்டு சுற்றி வைத்து, புறஊதா குறையடர்த்தி படலங்களை, மரத்தூண்களின் கூர்மையான பகுதிகள் மற்றும் ரெஸினிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.
    7. புறஊதாக்கதிர் தடுப்திறன் கொண்ட குறையடர்த்தி நெகிழி படலங்களை படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் நீள வாக்காக விரிக்க வேண்டும். இரு விளிம்புகளிலும் 2 இஞ்ச் அளவிற்கு மடக்கி ரப்பர் வாஷருடன் கூடிய கோர்ப்பு ஆணியை, 4 இஞ்ச் என்ற அளவில் சமமான இடைவெளி விட்டு பொருத்த வேண்டும். பசுமையகத்தின் முன் மற்றும் பக்கவாக்கிலும் குறையடர்த்தி நெகிழி படலத்தை கொண்டு மூட வேண்டும். ஷீட்டை வெட்டிவிட்டு ஆணி மற்றும் வாஷர் கொண்டு பொருத்துவதன் மூலம் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கலாம். நுழைவு பகுதிகள், தவிர மற்ற இடங்களில் விளிம்பு பகுதிகளை மண்ணில் புதைத்து மூடி விடவும். இரு நுழைவு வாயிலிலும அதிகமான அடர்த்தி உள்ள நெகிழி படல ஷீட்டுகளை கொண்டு சுருட்டி, தொங்க விட வேண்டும்.
    8. படத்தில் குறிப்பிட்டுள்ளது போல இரு நுழைவாயிலிலும் உலோக கொக்கியை பொருத்தவும். இரு புறத்திலும் சுருட்டிய அதிகமான அடர்த்தி நெகிழி படலங்களை தாங்குவதற்கு கொக்கி பயன்படுகிறது.

    No comments: