Wednesday, 27 May 2009

ஷேர் டிரேடிங்(share trading)

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை விலைக் குறைவான நேரத்தில் வாங்கி பின் நமக்கு சரியான நேரத்தில் நல்ல விலை வரும் போது கொஞ்சமாகவோ,மொத்தமாகவோ விற்றுவிடலாம்.மீண்டும் அந்த பணத்தை வேறு ஏதாவது பங்குகளை வாங்குவதற்கோ அல்லது அதே பங்கினை வாங்குவதற்கோ பயன்படுத்தலாம்.இதுவே ஷேர் டிரேடிங் ஆகும்.

Tuesday, 19 May 2009

ஷேர் மார்க்கெட்

சில வரையருக்கப்பட்ட கம்பெனிகள் எனப்படும் நிறுவணங்கள்,ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு, பொது மக்களிடமிருந்து பணத்தை முதலீடாகப் பெற பங்குகள்எனப்படும் ஷேர்களை விற்பார்கள்.ஒவ்வொரு ஷேருக்கான விலையையும் அவர்களே நிர்ணயித்திற்பார்கள். கம்பெனிகளில் இரண்டு வகை உள்ளது
  1. பிரைவேட் லிமிடெட் கம்பெனி
  2. பப்ளிக் லிமிடெட் கம்பெனி
இந்த வகையில் வரும் கம்பெனிகள் சிலவற்றை,பங்கு சந்தையில் லிஸ்ட் செய்திருப்பார்கள்.இவ்வாறு லிஸ்ட் செய்யப்பட்ட பங்குகளை யாரும் வாங்கலாம்,விற்கலாம். இந்தியாவின் பங்கு சந்தையிகளில் மும்பை பங்கு சந்தை(BSE) ,தேசிய பங்கு சந்தை(NSE) ஆகிய இரண்டும் முக்கியமானவை ஆகும்.
ஷேர் டிரேடிங்(share trading)

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை விலைக் குறைவான நேரத்தில் வாங்கி பின் நமக்கு சரியான நேரத்தில் நல்ல விலை வரும் போது கொஞ்சமாகவோ,மொத்தமாகவோ விற்றுவிடலாம்.மீண்டும் அந்த பணத்தை வேறு ஏதாவது பங்குகளை வாங்குவதற்கோ அல்லது அதே பங்கினை வாங்குவதற்கோ பயன்படுத்தலாம்.இதுவே ஷேர் டிரேடிங் ஆகும்.

Tuesday, 13 January 2009

சர்க்கரைப் பொங்கல் புளிக் குழம்பு

தேவையானப் பொருட்கள்
  • கத்தரிக்காய்-3
  • பரங்கிக்காய்-4துண்டு
  • வாழைக்காய்-6துண்டு
  • அவரைக்காய்-5
  • நறுக்கிய சின்ன வெங்காயம்-1கைப்பிடி
  • தக்காளி -1
  • பச்சை மொச்சைக்காய்-1கப்
  • தட்டை பயிறு-1/4கப்
  • புளி-1எழுமிச்சை அளவு
  • கடலைப் பருப்பு-1தேக்கரண்டி
  • உ.பருப்பு-1/4தேக்கரண்டி
  • தனியா-1/4தேக்கரண்டி
  • வரமிளகாய்-2
  • தேங்காய்-1/2மூடி
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி தழை
  • உப்பு-தேவைக்கு
  • மஞ்சள் தூள்-1பின்ச்
  • சாம்பார்த் தூள்-11/2மேஜைக்கரண்டி.
செய்முறை
  1. தட்டைப் பயிறை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. பின் தட்டைப் பயிறையும்,பச்சை மொச்சை (இல்லையெனில் காய்ந்த வெள்ளை மொச்சையையும்) சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  3. கடலைப் பருப்பு, உ.பருப்பு, தனியா, வரமிளகாய், தேங்காய், கருவேப்பிலை ஆகியவற்றை கொஞ்சம் எண்ணெயில் வறுத்து பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,நறுக்கிய சி.வெங்காயம்,தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு நறுக்கிய காய்களை சேர்க்கவும்.
  6. அதனுடன் அரைத்த மசாலாவை ஊற்றி,தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள்,சாம்பார்த் தூள்,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  7. இதனுடன் வேக வைத்த தட்டைப் பயிறையும்,பச்சை மொச்சையையும் சேர்க்கவும்
  8. குழம்பு நன்கு கொதித்தவுடன் புளி ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  9. கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

மீன் கிரேவி

மீன் கிரேவி

மீன் கிரேவி

தேவையானப் பொருட்கள்
  • மீன் -1/2கிலோ
  • சின்னவெங்காயம்-1கப்
  • தக்காளி-2
  • புளி-எழுமிச்சை பழம் அளவு
  • மிளகு-சிறிது
  • வெங்காய வடகம்(தாளிப்பு வடகம்)-1
  • மஞ்சள்தூள்-1/2தேக்கரண்டி
  • சாம்பார்த் தூள்-11/2 மேசைக்கரண்டி
  • பூண்டு-5பல்
  • உப்பு-தே.அளவு
  • நல்லெண்ணெய்-2மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை-3கொத்து
  • கொத்தமல்லி தழை--கொஞ்சம்
செய்முறை
  1. மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காய வடகம்,மிளகு,பூண்டு ஆகியவற்றை சேர்த்து வெடித்த உடன் கருவேப்பிலைப் போடவும்
  3. பிறகு வெங்காயம்,தக்காளியை நன்கு அரைத்து சேர்க்கவும்.
  4. உப்பு,மஞ்சள் தூள் போடவும்
  5. பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  6. பிறகு சாம்பார் தூள் சேர்க்கவும்.
  7. எண்ணெய் பிரிந்து வந்த பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. பிறகு புளி கரைசலை சேர்த்து குழம்பை நன்கு கொதிக்கவிடவும்
  9. கடைசியாக மீனை ஒவ்வொன்றாக சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து தவாவை மூடி ஒரு 10நிமிடம் வைக்கவும்.இப்பொழுது நன்கு எண்ணெய் மிதந்து கிரேவி போல் வந்து விடும்.
  10. பிறகு அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை கொஞ்சம் தூவி இறக்கவும்.

சிக்கன் பிரியாணி/மட்டன் பிரியாணி

சிக்கன் பிரியாணி/மட்டன் பிரியாணி

சிக்கன் பிரியாணி/மட்டன் பிரியாணி

(குறிப்பு:மட்டன் பிரியாணி எனில் இதே குறிப்பினைக் கொண்டு சிக்கனுக்கு பதில் மட்டன் சேர்க்கவும்.) தேவையானப் பொருட்கள்
  • சிக்கன் -1/2கி
  • பாசுமதி அரிசி -1/2கிலோ
  • வெங்காயாம் -1
  • தக்காளி -1
  • ப.மிளகாய் -5
  • மிளகாய்த்தூள் -1தேக்கரண்டி
  • ம.தூள் -1/2ஸ்பூன்
  • தேங்காய்ப்பால் -1கிளாஸ்
  • எண்ணை -100கி
  • நெய் -3மேஜைக்கரண்டி
  • புதினா,கொத்தமல்லித்தழை-தேவைக்கு
  • இஞ்சி, பூண்டு விழுது-3தேக்கரண்டி
  • ஏலக்காய் -2
  • பட்டை -2
  • அன்னாசி மொக்கு,பிரியாணி இலை -1
  • சோம்பு -1ஸ்பூன்
  • உப்பு -தேவையானது
செய்முறை
  1. ஏலக்காய்,சோம்பு, பட்டை ஆகியவற்றை தூளாக்கவும்.
  2. 3ப.மிள்காயை இஞ்சி பூண்டுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு அடி கனமான பத்திரத்தில் எண்ணை மற்றும் நெய் சேர்த்து இஞ்சி,பூண்டு விழுதுடன் பட்டை,சோம்புத் தூளையும் போட்டு வதக்கவும்
  4. பின் வெங்காயத்தை வதக்கி,தக்காளி, ப.மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கிப் பின் புதினா, கொத்தமலித்தழை சேர்த்து கிளறவும்
  5. இப்பொழுது சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  6. பின் அரிசியை சேர்த்து 2நிமிடம் கிளறவும்.
  7. பிறகு 1கிளாஸ் தேங்காய்ப்பாலுடன் 2-1/2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் சிறுதீயில் மூடிவைக்கவும்.
  8. 3/4பதம் வெந்தவுடன் நெய் ஊற்றி கிளறி மூடி வைக்கவும்.
  9. சிறிது நேரத்தில் மறுபடியும் கிளறி அடுப்பை அணைக்கவும்.
  10. அருமையான சிக்கன் பிரியாணி ரெடி.

சிக்கன் குழம்பு/மட்டன் குழம்பு

சிக்கன் குழம்பு/மட்டன் குழம்பு

சிக்கன் குழம்பு/மட்டன் குழம்பு

(குறிப்பு:மட்டன் குழம்பு எனில் இதே குறிப்பினைக் கொண்டு சிக்கனுக்கு பதில் மட்டன் சேர்த்து செய்யவும்.) தேவையான் பொருட்கள்
  • சிக்கன்- 1/2 கிலோ(நன்றாகக் கழுவி சுத்தம் செய்தது)
  • தேங்காய் -1/2 மூடி
  • சின்ன வெங்காயம்-10
  • தக்காளி -1
  • இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பட்டை,கிராம்பு,சோம்பு,கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்த தூள்-1/2தேக்கரண்டி
  • சிக்கன் மசாலா தூள்-காரத்திற்கு ஏற்ப
  • எண்ணெய் - ஒன்றரை மேஜைக்கரண்டி
  • கருவேப்பிலை-கொஞ்சம்
செய்முறை
  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் கசகசா இரண்டையும் போட்டு வதக்கவும்.
  2. வதக்கிய வெங்காயத்தை தேங்காயுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் அரை மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சிபூண்டு,பட்டை,கிராம்பு,சோம்பு,கசகசா விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  4. பின் கறிவேப்பிலை,சிக்கன் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  5. பின் உப்பு மற்றும் மஞ்சள்த்தூள் போட்டு நல்ல வாசம் வரும் வரை வதக்கவும்.
  6. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு, சிக்கன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  7. பின் தேங்காய்,வெங்காயம் அரைத்த விழுதில் கொஞ்சம் சேர்த்து நன்கு கலந்துக் குக்கரில் ஒரு விசில் விடவும்.
  8. பின் மீதி உள்ள தேங்காய்,வெங்காய விழுதை சேர்த்துத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டு இறக்கவும்.
  9. இப்பொழுதும் தேவையான அளவு சிக்கன்மசாலாத் தூள் சேர்க்கவும்.
  10. குழம்பு நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

க்ரீன் சிக்கன்

க்ரீன் சிக்கன்

க்ரீன் சிக்கன்

தேவையானப் பொருட்கள்
  • சிக்கன் - கால் கிலோ
  • வெங்காயம் - ஒன்று
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு - 1 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி - 2 கொத்து
  • புதினா - 2 கொத்து
  • பச்சை மிளகாய் - 4
  • சோம்பு,பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய்-தாளிக்க தேவையான அளவு
  • இஞ்சி,பூண்டு விழுது -11/2 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - அரை கப்
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை
  1. சிக்கனை கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ளவும்.
  2. இஞ்சி, பூண்டு இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  4. கொத்தமல்லி, புதினா இரண்டையும் தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும்.
  5. மிக்ஸியில் கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
  6. பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  7. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு,சோம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  8. அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது போட்டு 2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  9. அதன் பின் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.
  10. பின் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கி பின் உப்பு போடவும்.
  11. பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக வரும் வரை கொதிக்க விடவும்.
  12. சிக்கன் நன்கு வெந்து, தண்ணீர் சுண்டியதும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும.

பெப்பர் சிக்கன்

பெப்பர் சிக்கன்

பெப்பர் சிக்கன்

தேவையானப் பொருட்கள்
  • கோழி - ஒரு கிலோ
  • வெங்காயம் - 150 கிராம்
  • தக்காளி - 150 கிராம்
  • சீரகம்,மிளகு -கொஞ்சம்
  • பூன்டு,இஞ்சி விழுது-1மேஜைக் கரண்டி
  • பட்டை,ஏலம்,கிராம்பு அரைத்த தூள்-1தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • எண்ணை - 150 கிராம்
  • கொத்து மல்லி - அரை கட்டு
  • புதினா - கொஞ்சம்
  • சிக்கன் மசால தூள்-1/2 பாக்கெட்
  • மிளகு தூள் -3 ஸ்பூன்
செய்முறை
  1. வெங்காயம்,தக்காளியை பச்சையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அரைக்கும் போது அதனுடன் சீரகம்,மிளகையும் சேர்த்து அரைக்கவும்.
  3. எண்ணையை காய வைத்து பட்டை ஏலம்,கிராம்பு போட்டு வெடித்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சவாடை போகிறவரை வதக்கவும்.
  4. பிறகு கொத்து மல்லி, புதினா சேர்க்கவும்.
  5. பிறகு அரைத்த வெங்காயம், தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சைவாடை போகிறவரை சிம்மில் வைத்து வதக்கவும்.
  6. சரியான அளவு வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்க்கவும்.
  7. எண்ணெய் பிரிந்து வந்த பிறகு சிக்கன் மசாலா தூள்,மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு போட்டு வதக்கவும்.
  8. பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும்,நல்ல சிம்மில் வைத்து கிரேவி பதம் வரும் போது எடுத்து வைத்துள்ள மிளகுத் தூளை தூவி நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை நிறுத்தவும்.
  9. மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Wednesday, 7 January 2009

IBKCC Plus (Indian Bank Kisan Credit Card Plus)

IBKCC Plus (Indian Bank Kisan Credit Card Plus)

IBKCC Plus (Indian Bank Kisan Credit Card Plus)

This scheme additionally caters to the needs of Agri Medium term loan requirement of the farmers also in the KCC scheme as "KCC Plus". The eligible loan amount is arrived as below.
20% of the Maximum Permissible Limit (MPL) will be built as a term loan to enable the farmer to purchase farm assets based on his/her requirements including Agri/Allied activities subject to:

  • Maximum of Rs 50000 where activities do not generate any direct additional income like fencing, reclamation of problematic soils, steining of wells etc.
  • (0r)Maximum of Rs.2.00 lakhs where activities generate direct additional income like dairy, goat rearing, Sheep rearing, purchase of farm equipments like power sprayers, seed drill, etc.

Kisan Credit Card (KCC)

Kisan Credit Card (KCC)