Saturday, 1 November 2008

அலோவேரா

அலோவேராவிற்கு என்று தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லை.அலோவேரா பல்வேறு விதமாக சந்தையில் கிடைக்கிறது.இதிலிருந்து பெறப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது.மருந்து தயாரித்தல்,தோல் சம்பந்தப் பட்ட நோய்களுக்கும் மற்றும் அழகு சாதனப் பொருட்களிலும் இதனை பயன்படுத்துகின்றனர்.

ரகம்

அலோவேரா பார்படன்சிஸ் என்ற ரகமே பெரும்பாலும் பயன்ப்டுத்தப்படுகிறது.

நடவு முறைகள்

நல்ல வெப்பமான சூழலும்,நன்கு வடிகால் வசதியுடன் கூடிய நிலமும் அவசியம்.மண்ணின் தன்மைக் குறைவான தாக இருந்தாலும் நன்கு தாங்கி வளரக்கூடியது.

தட்ப,வெப்ப நிலை

அலோவேராவானது 95% தண்ணீரை உள்ளடக்கியுள்ளது.என்வே,இது பனி பிரதேசங்களை விடவும் வெப்பமான சூழலில் நன்கு வளரும்.வெப்பமான சூழலில் இதனை வளர்க்கும் போது நன்கு செழிப்பாகவும்,படர்ந்தும் வளர்கிறது.இதனை நடும் போதும் நன்கு சூரிய ஒளி படுமாறு வளர்க்க வேண்டும்.வீட்டில் வளர்த்தாலும்,ஜன்னல் அருகில் வெயில் படுமாறு வைக்க வேண்டும்.இதற்கு முறையாக நீர் பாய்ச்ச வேண்டும்.

இனப்பெருக்கம் செய்தல்
  • விதைகளை வெப்பமான சூழலில் உள்ள ஒரு கிரீன்ஹவுஸில் வளர்க்க வேண்டும்.
  • விதையானது 16டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் 1-6 மாதங்களுக்கு வளர்க்க வேண்டும்.
  • 6 மாதங்களுக்குப் பிறகு வளர்ந்த கன்றுகளை தனித்தனியான்த் தொடிகளுக்கு மாற்ற வேண்டும்
  • இதனை கிரீன்ஹவுஸில் வளர்க்கும் போதும் குளிர் காலங்களில் சூரிய ஒளி படும் இடங்களில் வைத்து வளர்க்கவும்.
  • கிரீன்ஹவுஸ் அல்லாமல் வெளியில் வளர்க்கும் போது குளிர் காலங்களுக்கு முன்பே நட வேண்டும்.
  • குளிர் காலங்களில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மண் தன்மை

வளம் குன்றிய மண்ணாக இருந்தாலும் நன்கு வேகமாக தண்ணீர் வடியக் கூடிய மண்ணாக இருக்க வேண்டும்.ஏனெனில் அலோவேராவானது அதனுள் நீர் தன்மையை அதிகம் கொண்டுள்ளதனால் நீர் வடியவில்லை எனில் வாடிவிடும்.

குளிர் காலங்களில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள்

அலோவேராவானது அதனுள்(இலை,வேர்) நீர் தன்மையை அதிகம் கொண்டுள்ளதனால் குளிர் காலங்களில் வளர்க்க கொஞ்சம் அனுபவம் தேவை.இந்த காலங்களில்,இதன் வளர்ச்சி குன்றி தான் காணப்படும்.மேலும் இது எடுத்துக் கொள்ளும் ஈரப்பதத்தின் அளவும் மிக,மிகக் குறைவே.எனவே குறைவாகவே நீர் பாய்ச்ச வேண்டும்.மண் சுத்தமாக காய்ந்துள்ள போது மட்டும் கூட நீர் பாய்ச்சலாம்.

தொட்டிச் செடி வளர்ப்புக்கு தொட்டியினை தேர்வு செய்தல்
  • பெரிய தொட்டிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.(வேர்த் தொகுதியானது படர்ந்தும்,பெரியாதாகவும் இருக்கும்.
  • தொட்டியின் அடியில் அதிகப்படியான நீரினை வெளியேற்ற சிறு ஓட்டை ஒன்று இருக்க வேண்டும்.
  • தொட்டியினுல் கரகரப்பான மண்துகள்(coarse sand),பாறைதுகள்கள்(Granite grit) மற்றும் பெர்டைல்(pertile) போன்றவற்றை கலந்து உள்ளே பயன்படுத்தவும்.
  • சில நேரங்களில் உரங்களையும் பயன்படுத்தலாம்.
அலோவேராவின் பயன்கள்
  • தோல் வள்ர்ச்சியை அதிகப் படுத்துகிறது.
  • இதனுள் உள்ள அமிலமானது சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.
  • பாக்டீரியா,ஃப்ங்கை,வைரஸ் போன்றவற்றை கொள்ளும் நச்சுத் தடை நீக்கியாக உள்ளது.
  • தோலின் பொலிவிற்கும் பயன்படுகிறது.
  • முகப்பரு நீக்கவும் இதன் ஜெல் பயன்படுகிறது.
  • வழுக்கைத் உருவாதலைத் தடுக்கவும் இது பயன்படுகிறது.
  • இது வெட்டுக்காயம்,கன்றி போன காயம் மற்றும் எரிச்சல் போன்றவற்றை குறைக்கிறது.
அலோவேராவிலிருந்து பெறப்படும் பொருட்கள்
  • அலோவேரா ஜெல்: தோல் எரிச்சல், தழும்புகள், பூச்சிக் கடி மற்றும் தோல் சம்பந்தமான நோயகளையும் குணப்படுத்துகிறது.
  • பாடி கண்டிஷனிங் கிரீம்
  • அலோ லோஷன்/Aloe Lotion
  • அலோ ஸ்கிரப்/Aloe Scrub
  • அலோ சன்லஸ் டேனிங் லோஷன்/Aloe Sunless Tanning Lotion
  • அலோ சன்ஸ்கிரீன்/ Aloe Sunscreen
  • உடல் சூட்டிற்கு/Heat lotion
  • மாய்சரைசிங் லோஷன்/Moisturizing Lotion
  • அலோ உதட்டிற்கான ஜெல்/Aloe lip gel
  • டயட்டரி ஜூஸ்/Dietary juice
  • டயட் பேக்ஸ்/ Diet packs
  • ஹெபர்பல் டீ/ Herbal tea
  • கருவளையத்தை நீக்குதல்/Alluring Eyes: removes dark circle under your eyes.
  • அலோ பாடி டோனர்/Aloe Body Toner: body toner available to tone your skin.
  • Aloe Fleur de Jouvence Facial Treatment
  • குழந்தைக்ளுக்கான பொருட்கள்/Baby Care: various aloe vera products are available for baby care.
  • கால்நடைகளுக்கான பொருட்கள்/Veterinary Products: various Veterinary products available for animals.
  • பிரக்னட் லேடிஸ்/Mothers Care: Aloe vera plant products and aloe vera cosmetic products are their, for pregnant women to give relief from the pregnancy marks.
  • All-purpose green detergent: Green detergents to give your house a beautiful look.
கீழ்கண்டவைகளில் இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டுள்ளது
  • வாய் துர்நாற்றம்/Bad breath: To cure the dental and mouth problem.
  • இரத்த செல்களை அதிகரித்தல்/Blood building: To increase the RBC count of blood.
  • கேன்சர்/Cancer: most research on curing cancer.
  • எழும்புத் தேய்மானத்தை நீக்குதல்/Weak bones: to help cure weak bones.
  • Trembling hands: Aloe vera research to help trembling hands.
  • டைஃபாய்டு/Typhoid: to cure typhoid.
  • Low sperm count: to increase sperm count.
  • எய்ட்ஸ்/ஹச் ஜ வி-Tocure HIV/AIDS.
பின் குறிப்பு

விவசாயிகள் எப்பொழுதும் தாங்கள் இருக்கும் இடம் மற்றும் தட்ப,வெப்ப நிலை மற்றும் மேலே உள்ள பொருட்கள் தயாரிக்கும் தொழ்ற்சாலைகள் அருகில் இருப்பது சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு நடவு செய்ய வேண்டும்.

1 comment:

P.Parasu said...

அலோவேரா பற்றிய செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது எங்களைப் போன்ற விவாசயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் இது பொன்ற பயனுள்ள தகல்கள் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -பரசு