(குறிப்பு:மட்டன் கிரேவி எனில் இதே குறிப்பினைக் கொண்டு சிக்கனுக்கு பதில் மட்டன் சேர்க்கவும்.)
தேவையானப் பொருட்கள்
- கோழி - ஒரு கிலோ
- வெங்காயம் - 150 கிராம்
- தக்காளி - 150 கிராம்
- சீரகம்,மிளகு -கொஞ்சம்
- பூன்டு,இஞ்சி விழுது-1மேஜைக் கரண்டி
- பட்டை,ஏலம்,கிராம்பு அரைத்த தூள்-1தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
- எண்ணை - 150 கிராம்
- கொத்து மல்லி - அரை கட்டு
- புதினா - கொஞ்சம்
- சிக்கன் மசால தூள்-1பாக்கெட்.
செய்முறை
- வெங்காயம்,தக்காளியை பச்சையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அரைக்கும் போது அதனுடன் சீரகம்,மிளகையும் சேர்த்து அரைக்கவும்.
- எண்ணையை காய வைத்து பட்டை ஏலம்,கிராம்பு போட்டு வெடித்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சவாடை போகிறவரை வதக்கவும்.
- பிறகு கொத்து மல்லி, புதினா சேர்க்கவும்.
- பிறகு அரைத்த வெங்காயம், தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சைவாடை போகிறவரை சிம்மில் வைத்து வதக்கவும்.
- சரியான அளவு வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்க்கவும்.
- எண்ணெய் பிரிந்து வந்த பிறகு சிக்கன் மசாலா தூள்,மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு போட்டு வதக்கவும்.
- பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும்,நல்ல சிம்மில் வைத்து கிரேவி பதம் வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
- மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
2 comments:
Dear friend
Nice chicken greavy but you forget to add chicken in to the gravey.
Velu
Mr.Velu
Thank you very much for your comment.Now, i include what you mentioned.
Post a Comment